

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், 121 கலைஞர்கள் இணைந்து சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசித்து இசை மழையை பொழிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்பொழுது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பாரம்பாரிய இசையான சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த இசை விருந்தை, பக்தர்கள் கண்டு களித்தனர்.