சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் : கேரள முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

சபரிமலை கோயிலில் நாளை நடை திறக்கப்படும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் : கேரள முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
Published on
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் தரப்பில் 48 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com