Kerala | ஸ்பாவுக்குள் புகுந்து பெண்ணை வன்கொடுமை செய்த ரவுடி.. பட்டப்பகலில் கொடூரம்
ஸ்பாவுக்குள் புகுந்து பெண்ணை வன்கொடுமை செய்த ரவுடி.. பட்டப்பகலில் கொடூரம் ஸ்பாவுக்குள் புகுந்து பெண் மேலாளரை வன்கொடுமை செய்த ரவுடி கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் ஸ்பாவுக்குள் புகுந்து மிரட்டிய பிரபல ரவுடி, அங்கிருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்.. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள ஸ்பா ஒன்றுக்குள் கூட்டாளிகளுடன் நுழைந்த பிரபல ரவுடி சுபின், அங்கிருந்த பெண் மேலாளரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்தப் பெண் பணம் கொடுக்காததால், வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று படுக்கையில் தள்ளி கழுத்தில் கத்தியை வைத்து, சுபின் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயையும் ரவுடி சுபின் வலுக்கட்டாயமாக பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரபல ரவுடி சுபினை கேரள போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
