kerala | Protest | வெடித்த வன்முறை.. போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் - தகதகவென எரிந்த தொழிற்சாலை

x

கோழிக்கோட்டில் தாமரச்சேரி பகுதியில் தனியார் இறைச்சி கழிவு தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. போராட்டத்தின் போது போராட்டக்காரர்களே தொழிற்சாலையில் தீ வைத்ததாக கூறப்படும் நிலையில், தீயணைப்பு வாகனத்தை தீயை அணைக்க விடாமல் போராட்டக்காரர்கள் விரட்டியத்தனர். மேலும் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில், 2 தரப்பிலும் பலர் காயமடைந்தனர். குறிப்பாக, கோழிக்கோடு ஊரக எஸ்.பி. உள்பட 2 காவலர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்