போஸ்ட் ஆபீஸுக்கு வந்த பார்சலை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கரக்காமுரி தபால் நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து பார்சல் ஒன்று வந்தது. காக்க நாட்டைச் சேர்ந்த சபியோ ஆபிரகாம் ஜோசப் என்பவருக்கு வந்த பார்சலில் சந்தேகம் இருப்பதாக தபால் நிலைய ஊழியர்கள் சுங்கத்துறையினருக்கு தெரிவித்தனர். சுங்கத்துறையினர் பார்சலை பிரித்து சோதனை செய்ததில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஆபிரகாம் ஜோசப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Next Story
