Kerala Police | பிரபல யூடியூபர் நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. விரட்டி விரட்டி தடியடி!

x
  • யூடியூபர் இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- போலீஸ் தடியடி
  • கேரள மாநிலம், காசர்கோட்டில் பிரபல யூடியூபர் ஹனான் ஷாவின் இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், பாதியிலேயே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் லட்சக் கணக்கானோர் பின்பற்றி வரும் ஹனான் ஷாவின் இசை நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கானோர் மைதானத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்ததால், அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்