போலீஸ் ஸ்டேஷனில் சிக்கன் சமைத்த கேரள போலீஸ்.. ட்விஸ்ட் வைத்த ஐஜி - வைரல் வீடியோ

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், கடைக்கு சென்று சிக்கன் வாங்கி காவல் நிலையத்தில் வைத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த காட்சிகளை முழுவதுமாக வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பும் அளித்து நல்ல விதமான கமெண்ட்களையும் பதிவு செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், டியூட்டி நேரத்தில் காவல் நிலையத்தில் வைத்து சமையல் செய்து வீடியோ பதிவேற்றியது குறித்து விளக்கம் அளிக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com