கேரள கன்னியாஸ்திரி பலாத்கார புகார்: சமூக ஆர்வலர் 9வது நாளாக உண்ணாவிரதம்

கேரள கன்னியாஸ்திரி பலாத்கார புகாரில் பேராயரை கைது செய்யக் கோரி ஸ்டீபன் மேத்யூஸ் என்ற சமூக ஆர்வலர் ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கேரள கன்னியாஸ்திரி பலாத்கார புகார்: சமூக ஆர்வலர் 9வது நாளாக உண்ணாவிரதம்
Published on

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தரில் பணியாற்றும் பேராயர் பிரான்கோ முலக்கல் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இந்நிலையில், பேராயரை கைது செய்யக் கோரி, கொச்சியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டீபன் மேத்யூஸ் என்ற சமூக ஆர்வலர், ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மருத்துவமனையில் மேத்யூஸ் அனுமதிக்கப்பட்டார்.

இதுபோல கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கத்தை சேர்ந்த இந்துலேகா ஜோசப் என்பவர், பேராயர் பிரான்கோ மீது கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com