3% மக்கள் வீடுகளை விட்டு வர மறுக்கிறார்கள் - கேரள அமைச்சர் சுதாகரன் தகவல்

கேரளாவின் ஆலப்பி பகுதியில், மூன்று சதவீத மக்கள் தங்களது வீடுகளை விட்டு வர மறுப்பதாக அம்மாநில அமைச்சர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

3% மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியே வர விரும்பவில்லை. அவர்கள் உணவு மட்டுமே கேட்கிறார்கள். அவர்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறோம். பெரும்பாலான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு எங்களுக்கு உதவி செய்கிறது. மொத்த இந்தியாவும், உலக நாடுகளும் எங்களுக்கு உதவி செய்கின்றன. ஆலப்பி பகுதியின் மொத்த மக்கள் தொகையான 34 லட்சம் பேரில், கடந்த 4 மாதங்களில் 35 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். எங்களுக்கு போர்வைகள், மருந்துகள் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com