

கேரளாவில் பால் பற்றாக்குறை பிரச்னையை போக்க தமிழக முதல்வர் உதவ முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ள அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டதாகவும் அதற்கு அவர் இப்பிரச்னையை போக்கிட உதவுவதாக உறுதியளித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.