Kerala | திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ - கொழுந்துவிட்டு எரிந்த பகீர் காட்சி
கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது...ரயில் நிலையத்தை ஒட்டிய வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின.600-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்த வாகங்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, தீ மரங்களிலும் பரவி நிறுத்தப்பட்டிருந்த ரயில் என்ஜினிலும் பிடித்த நிலையில், உடனடியாக என்ஜின் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
