Kerala | "பரிகார பூஜை செய்யணும்.." - தனி அறைக்கு சிறுமியை அழைத்து சென்று அசிங்கம் செய்த ஜோதிடர்
"இதுக்கு பரிகார பூஜை செய்யணும்.." - தனி அறைக்கு சிறுமியை அழைத்து சென்று அசிங்கம் செய்த ஜோதிடர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஜோதிடர் கைது கேரளாவில் 16 வயது சிறுமிக்கு பரிகாரம் செய்வதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடர் முராளி சுந்தரி என்ற ராஜன் பாபுவை போலீசார் கைது செய்தனர். கொட்டாரக்கரை அருகே வெண்டர் பகுதியை சேர்ந்த ராஜன் பாபு என்பவர் பரிகார பூஜை மற்றும் திருமண வரன் அலுவலகத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் புத்தூர் பகுதியை சேர்ந்த பெண் தனது மகள் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாக கூறியுள்ளார். அப்போது, ராஜன்பாபு சிறுமிக்கு பரிகார பூஜை செய்வதாக கூறி தனி பூஜை அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் புத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ராஜன்பாபு மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
