Kerala | "வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்" பெருமையோடு பேசிய கேரள முதல்வர்
இந்தியாவில் தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரளாவை அறிவிப்பது ஒரு புதிய சகாப்தம் என, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கேரள மாநிலம் உதயமான இந்த நன்நாளில், சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிடுவதாகவும், இதன்மூலம் கேரளா புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கூடிய முதல் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
Next Story
