வயநாடு காங்., எம்பி பிரியங்கா காந்திக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வயநாடு தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையை ஒட்டி, கேரள உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்கள் குறித்து உண்மைக்கு புறம்பாக பிரியங்கா காந்தி பதிவு செய்திருந்ததாகவும் , குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை குறிப்பிடாமல் மறைத்ததாகவும் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என பிரியங்கா காந்திக்கு உத்தரவிட்டுள்ளது.
Next Story