"29 லட்சம் பேருக்கு மட்டும் முதல் டோஸ் நிலுவை" - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கேரளாவில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கை நெருங்கி விட்டதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.
"29 லட்சம் பேருக்கு மட்டும் முதல் டோஸ் நிலுவை" - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
Published on

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இரண்டு கோடியே 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியிருந்த நிலையில், இரண்டு கோடியே 67 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டினார். திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, மாநிலத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 88.94 விழுக்காடாகவும் இரண்டாவது டோஸ் 36.67 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், மாநிலத்தில் 29 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி முதல் டோஸ் வழங்க வேண்டும் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com