இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது : கேரள அரசு அறிவிப்பு

ஜனவரி 15 ம் தேதி சபரிமலையில் நடைபெறவுள்ள மகரவிளக்கு பூஜை விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு 'ஹரிவராசனம்' விருது வழங்கப்படவுள்ளது.
இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது : கேரள அரசு அறிவிப்பு
Published on

சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களுக்கு ஆண்டுதோறும் 'ஹரிவராசனம்' விருது வழங்கி சிறப்பிப்பதை கேரள அரசு வழக்கமாக கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு பி.சுசீலாவுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த வகையில், இசையமைப்பாளர் இளைய ராஜாவிற்கு இந்த ஆண்டு ஹரிவராசனம் விருது வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வெளியிட்டுள்ளார். விருது பெற்றதும், இளையராஜா தலைமையிலான இசைக்குழுவினர், சபரிமலையில் மகர விளக்கு பூஜையையொட்டி, இசைக் கச்சேரியும் நடத்த உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com