பெண் ஏர் ஹோஸ்டஸ் மலக்குடலில் 1 கிலோ தங்கம் - அரண்டு போன அதிகாரிகள்

மஸ்கட்டில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்திய விமான பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கொத்தாவை சேர்ந்த சுரபி காதூன் என்ற விமானப் பணிப்பெண் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கண்ணூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணியில் இருந்தார். சந்தேகத்தின் பேரில் சுரபு காதூனையும் வருவாய் புலனாய்வு இயக்குனரக பணியாளர்கள் சோதனை செய்தனர். அவர், தனது மலக்குடலில் 960 கிராம் தங்கத்தை கலவை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com