கேரளா தங்கக் கடத்தல் விவகாரம் - ஐ.ஏ.எஸ். சிவசங்கரனுக்கு முன்ஜாமின் வழங்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் எதிர்ப்பு

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரத்தில் என்.ஐ.ஏ கைது செய்ய வாய்ப்புள்ளதால் ஐ.ஏ.எஸ். சிவசங்கரன் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளா தங்கக் கடத்தல் விவகாரம் - ஐ.ஏ.எஸ். சிவசங்கரனுக்கு முன்ஜாமின் வழங்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் எதிர்ப்பு
Published on

அமீரகத்தில் இருந்து தங்க கடத்திய விவகாரத்தில் சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோருடன் தொடர்புடையவர் என, கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரான சிவசங்கரனிடம், அமலாக்கத்துறை, சுங்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனித்தனியே பல கட்ட விசாரணை நடத்தினர். இதனால், மூன்று துறையினரும், சிவசங்கரனை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சிவசங்கரன் தனக்கு உடல்நிலை பாதிப்பு இருப்பதாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். முன்ஜாமின் பெற்றுவரும் சிவசங்கரனை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்த சிவசங்கரன், கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்று முன்ஜாமின் வழங்கக் கூடாது என அதிகாரிகள் கோரியுள்ளனர். இதன்படி, முன்ஜாமின் கிடைக்காவிட்டால், சிவசங்கரன் கைதாகலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com