தங்கக் கடத்தல் வழக்கு - ஸ்வப்னாவுக்கு மேலும் 2 நாள் காவல் நீட்டிப்பு

தங்கக் கடத்தல் வழக்கில், ஸ்வப்னாவை மேலும் 2 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கு - ஸ்வப்னாவுக்கு மேலும் 2 நாள் காவல் நீட்டிப்பு
Published on

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை விசாரி​த்து வருகிறது. இதனிடையே, சிவசங்கர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், ஸ்வப்னா சுரேஷிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து, காவலில் எடுக்க மனு செய்த அமலாக்கத்துறைக்கு கொச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, வழக்கில் மேலும் 5 பேரை குற்றவாளிகளாக சேர்த்த என்.ஐ.ஏ., மலப்புரம் வந்தூரில் வசிக்கும் முகமது அப்சல் உள்பட மேலும் 5 பேர் மீது, என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. இதில், நான்கு பேர் ஐக்கிய அமீரகத்தில் உள்ளதால் இண்டர்போல் உதவியுடன் கைது செய்யவும் என்.ஐ.ஏ. முடிவு செய்துள்ளது. மொத்தம் 35 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் 21 பேர் கைதாகி உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com