தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சுவப்னா சுரேஷ் - என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சுவப்னா சுரேஷ், தூதரக அலுவலகத்தில் பணியில் இருக்கும்போதே முறைகேடுகளில் ஈடுபட்டது, என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சுவப்னா சுரேஷ் - என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்
Published on

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 3-வது மாதத்தில் நிதி தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அமீரகத்தின் தேசிய தின விழா நிகழ்ச்சி செலவில் முறைகேடு செய்தாக வெளியேற்றப்பட்டு, முக்கிய பிரமுகர்களின் தலையீட்டால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது. 2018ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2-வது புகாரின் பேரில் சுவப்னா வெளியேற்றப்பட்டார். அதன் பின் கேரள அரசின் ஐ.டி. துறையின் கீழ் உள்ள ஸ்பேஸ் பார்க்கில் ஆப்பரேஷன் மேனேஜராக, ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தார் சுவப்னா. 2016ம் ஆண்டு மணக்காடு பகுதியில் தூதரக அலுவலகம் துவங்கியபோது, நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட பெண்ணை மாற்றி விட்டு, சுவப்னா சுரேஷை நியமித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

----------------------

X

Thanthi TV
www.thanthitv.com