"கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு" - பிரதமர் நரேந்திரமோடி

கேரளாவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
"கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு" - பிரதமர் நரேந்திரமோடி
Published on
கேரளாவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய, பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.திருவனந்தபுரத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், எந்தெந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்ற விவரங்களை, அதிகாரிகள், பிரதமர் மோடிக்கு விளக்கி கூறினர். பின்னர், கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதேபோல, மழை - வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com