லைவ்வில் அப்படியே சரிந்து விழுந்த கேலரி.. உள்ளே சிக்கிய 30 பேர் நிலை? - பதைபதைக்க வைக்கும் வீடியோ
கேரளாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது கேலரி திடீரென இடிந்து விழுந்து 30க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர். பாலக்காடு பட்டம்பி வல்லப்புழா பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது. போட்டியை காண ரசிகர்கள் திரண்டனர். இந்நிலையில் திடீரென கேலரி இடிந்து விழுந்ததில் பார்வையாளர்கள் காயமடைந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே, கேலரி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
