Kerala Flood | கேரள வெள்ளம் - மாடிகளில் தஞ்சமடைந்த மக்கள் படகுகள் மூலம் மீட்பு
கேரள வெள்ளம் - மாடிகளில் தஞ்சமடைந்த மக்கள் படகுகள் மூலம் மீட்பு
கேரள வெள்ளம் - மாடிகளில் தஞ்சமடைந்த மக்கள் படகுகள் மூலம் மீட்பு
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் உணவின்றி வீடுகளின் மாடிகளில் தஞ்சடைந்துள்ள மக்கள் படகுகளில் மீட்கப்பட்டு வருகின்றனர்... பத்தனம்திட்டா, கோட்டயம், பாலக்காடு, கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கோட்டயம் மாவட்டம் நட்டாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால், வெளியேற முடியாமல் மக்கள் கடந்த இரண்டு நாட்களாக வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சமடைந்தனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காத நிலையில், பொதுமக்கள் உதவியுடன் சிறிய படகுகள் மூலம் வீடுகளின் மாடிகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
