வாய்த்தகராறு முற்றியதால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்...உயிருக்கு போராடும் பெண்

வாய்த்தகராறு முற்றியதால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்...உயிருக்கு போராடும் பெண்
Published on

கேரளாவின் இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலை பகுதியை சேர்ந்தவர் ஷீலா. ஏலக்காய் தோட்ட தொழிலாளியான இவர், சம்பவத்தன்று தன் வீட்டின் அருகே நின்று சக பெண் தொழிலாளிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஷீலாவுடன் அவரது பக்கத்து வீட்டுக்காரரான சசி என்பவர் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகாராறு முற்றியதில், ஷீலாவை வீட்டுக்குள் இழுத்துச் சென்று கதவை அடைத்த சசி, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டுக் கதவை உடைத்து பெண்ணை மீட்ட நிலையில், படுகாயத்துடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 60 சதவீத தீக்காயத்துடன் ஷீலா மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், இளைஞர் சசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com