Kerala | Fake Police | கிட்னாப்பில் இது புது ரகம்.. காவல்துறையையே அதிரவிட்ட விபரீத பிளான்

x

கிருஷ்ணகிரியை சேர்ந்த யூசுப், அகமது ஆகிய இருவரை, போலீஸ் வேடமணிந்து வந்த கேரளாவை சேர்ந்த 4 பேர் எஸ்பி முன்பு ஆஜர்படுத்த வேண்டும் எனக் கூறி திருவனந்தபுரத்துக்கு கடத்தி சென்று 50 லட்சம் ரூபாய் கேட்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் உதயங்குளங்கரை பகுதியில் ஒரு வீட்டில் 2 பேரையும் சங்கிலியால் கட்டி வைத்து தாக்கிய நிலையில், சந்தேகத்தின் பேரில் போலீசாரின் திடீர் சோதனையில், இக்கும்பல் பிடிபட்டது. இதுதொடர்பாக, Merchant Navy-யில் பணிபுரியும் அபிராம் என்பவர் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்