`கோவிந்தன் குட்டி' போட்ட ஆக்ரோஷ ஆட்டம் - சிதறி ஓடிய மக்கள் - பரபரப்பு காட்சிகள்
`கோவிந்தன் குட்டி' போட்ட ஆக்ரோஷ ஆட்டம் - சிதறி ஓடிய மக்கள் - பரபரப்பு காட்சிகள்
கேரள மாநிலம் மலப்புரத்தில், கோவில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானை திடீரென ஆக்ரோஷமடைந்து இருசக்கர வாகனத்தை உதைத்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலம்பூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு கோவிந்தன் குட்டி என்ற யானை அழைத்து வரப்பட்டது. திருவிழாவில் மக்கள் கூட்டத்தை கண்டதால் மிரண்ட யானை, திடீரென ஆக்ரோஷமடைந்தது. இதனால் மக்கள் சிதறி ஓடிய நிலையில், சாலையில் நின்ற இருசக்கர வாகனம் ஒன்றை யானை சேதப்படுத்தி அங்கும் இங்கும் திரிந்து போக்கு காட்டியது.
Next Story
