கோதையாறில் தற்கொலைக்கு முயன்ற கேரள முதியவர் மீட்பு
கன்னியாகுமரி கோதையாற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை, அங்குள்ள மலைவாழ் மக்கள் மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். பேச்சிப்பாறை அருகே கோதையார் மின் உற்பத்தி நிலையம் செல்லும் மலைப்பகுதியில் உள்ள கோதையாற்று மேம்பாலம் கீழே ஆற்றில் முதியவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மலைவாழ் மக்கள், ஆற்றில் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த முதியவரை மீட்டு, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றங்கரை பகுதியை சேர்ந்த மனோஜ் எனத் தெரியவந்துள்ளது. இதில், அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
