Kerala | Crackers | "இனி பட்டாசுகளை கடிக்கலாம்.." | இந்த தீபாவளி இது தான் ட்ரெண்ட்
பரபரக்கும் தீபாவளி - பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்
பட்டாசா சாக்லேட்டான்னு சந்தேகத்த ஏற்படுத்துற மாதிரி விதவிதமா பட்டாசு சாக்லேட்டுகள தயாரிச்சு அசத்தியிருக்காங்க.
தீபாவளி-ன்னாலே, பட்டாசுகள் விதவிதமாக கண்ணில் தென்படும். ஒவ்வொரு வருஷமும் என்னென்ன புது பட்டாசு வந்துருக்குன்னு தெரிஞ்சா, குழந்தைங்க ஆசையோட உச்சத்துக்கே போய்ரும்.
இப்போ பாக்குறதுக்கு பட்டாசு மாதிரியே இருக்குற சாக்லேட்டை தயாரிச்சு அசத்தியிருக்காங்க, கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ராஜி.
சங்கு சக்கரம், சரவெடி, பிஜிலி வெடி-ன்னு சாக்லேட்டுகளை வெடிக்க... சாரி கடிக்க வச்சுருக்காங்க.
குழந்தைகளோட பட்டாசு ஆசையையும், சாக்லேட் ஆசையையும் ஒரே நேரத்துல தீர்த்துருக்காங்க.
சாக்லேட்டுகளை வீட்டிலேயே தயாரிச்சு விற்பனையும் பண்ணிட்டு இருக்காங்க ராஜி.
Next Story
