"கைகளில் முத்தமிடுவதை தவிர்க்க வேண்டும்" - மதகுருமார்களுக்கு கேரள அரசு வேண்டுகோள்

கொரோனா வைரஸ் எச்சரிக்கையாக, ஒரே கரண்டியில் தண்ணீர், உணவு பொருட்கள் பகிர்வது, கைகளில் முத்தமிடுவது போன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக தவிர்க்குமாறு, மதகுருமார்களுக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
"கைகளில் முத்தமிடுவதை தவிர்க்க வேண்டும்" - மதகுருமார்களுக்கு கேரள அரசு வேண்டுகோள்
Published on
திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா, நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் மதகுருமார்கள் பெரும்பங்காற்றியதாக கூறினார். அதே போல் தற்போது கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் மக்களிடையே பங்காற்ற வேண்டும் என வேண்டுகொள் விடுத்துள்ளார்.வழிபாட்டு தலங்களில் ஒரே கரண்டியில் தண்ணீர், உணவு பொருட்கள் பகிர்வது, கைகளில் முத்தமிடுவது போன்றவற்றை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் மதகுருமார்களுக்கான கூட்டம் நடத்தி இது குறித்து விளக்க வேண்டும் என அமைச்சர் சைலஷா வலியுறுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com