

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 33 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீட்டு கண்காணிப்பில் ஆயிரத்து 237 பேர் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக வரும் பக்தர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே மலை ஏற அனுமதிக்கப்படுவர்கள் என அரசு அறிவித்துள்ளது.