Kerala | அமைச்சரை தாக்கிய காங்கிரஸார்..போலீசார் இடையே கடும் தள்ளுமுள்ளு -கேரளாவில் உச்சகட்ட பரபரப்பு

அமைச்சரை தாக்கிய காங்கிரஸார்..போலீசார் இடையே கடும் தள்ளுமுள்ளு -கேரளாவில் உச்சகட்ட பரபரப்பு

கேரளாவில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கல் வீசப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... கேரளாவில் காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது... கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜை காங்கிரஸார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் கண்ணூரில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கல் வீசப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்... அப்போது அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றதால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது...

X

Thanthi TV
www.thanthitv.com