kerala | முதல் படியை எடுத்து வைத்த குழந்தைகள்.. குடும்பம் குடும்பமாக திரண்ட மக்கள்
kerala | முதல் படியை எடுத்து வைத்த குழந்தைகள்.. குடும்பம் குடும்பமாக திரண்ட மக்கள் #kerala கேரளாவில் விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளின் கல்வி தொடக்கத்தைக் குறிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கோயில்களுக்கு வந்து, முதல் எழுத்தைப் பதிவு செய்து கல்விப் பயணத்தைத் தொடங்கினர். அரிசி அல்லது மணலில் குழந்தைகளின் விரல்களைப் பிடித்து, “ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ" என எழுத வைப்பது இந்தச் சடங்கின் சிறப்பம்சமாகும். பனச்சிக்காடு சரஸ்வதி கோயில், தட்சிண மூகாம்பிகை கோயில், துஞ்சன் பரம்பு உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கல்வி, அறிவு மற்றும் கலைகளில் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நடைபெற்ற இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சி, கேரளா முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
