திருமணமாகாமல் பெற்றெடுத்த குழந்தை, கொலை : குழந்தை சடலத்தை பையில் வைத்திருந்த மாணவி

கேரளாவில் கல்லூரி மாணவியின் புத்தகப் பையில் இருந்து குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகாமல் பெற்றெடுத்த குழந்தை, கொலை : குழந்தை சடலத்தை பையில் வைத்திருந்த மாணவி
Published on

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட முரிக்காசேரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பிறந்த குழந்தை, கொலை செய்யப்பட்டதாக, அவரது தோழி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து, மாணவியின் வீட்டிற்கு விரைந்த போலீசார், புத்தக பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். இந்த நிலையில், கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி, சிகிச்சை முடித்து வெளியே வந்த போது, கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முரிக்காசேரிக்கு அருகே உள்ள மணியாரன்குடியை சேர்ந்த இளைஞரை, மாணவி காதலித்து வந்தது தெரியவந்தது. ஆனால், அந்த இளைஞர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து, சில நாட்களில் அவரை பிரிந்து சென்றார். இதனால், மாணவிக்கும் இளைஞருக்கும் இடையே காதல் தொடர்ந்தது. இந்நிலையில், அந்த இளைஞர் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மாணவி கர்ப்பிணியானார். இந்த நிலையில், கடந்த வாரம் வீட்டில் பிறந்த குழந்தையை, ஈரத் துணியால் கழுத்தில் சுற்றி கொலை செய்ததாக மாணவி, வாக்குமூலம் அளித்துள்ளார். திருமணமாகாத மாணவி, தான் பிரசவித்த குழந்தையை, கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com