கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவிலுள்ள எஜம்குளம் கோயிலில், குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செலுத்துவது வழக்கம். அதே போன்று, கடந்த சனிக்கிழமை 10 மாத குழந்தை ஒன்றை வாங்கி தூக்க நேர்ச்சை செலுத்திய போது, திடீரென கையிலிருந்து நழுவி 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குழந்தை கீழே விழும் வீடியோ வெளியானதால், நடவடிக்கை எடுக்குமாறு மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தாமாக முன்வந்து, அடூரை சேர்ந்த சினு என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.