Kerala | தீடீரென ஆற்றில் பாய்ந்து மூழ்கிய கார் - நீருக்குள்ளேயே ஒரு முடிவெடுத்து தப்பிய டிரைவர்

x

Kerala | தீடீரென ஆற்றில் பாய்ந்து மூழ்கிய கார் - நீருக்குள்ளேயே ஒரு முடிவெடுத்து தப்பிய டிரைவர்

ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து- நீந்தி உயிர் தப்பிய ஓட்டுநர்

கேரள மாநிலம், கண்ணூரில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் விழுந்து 200 மீட்டர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கார் ஓட்டுநர் நீந்தி உயிர் பிழைத்தார். ஸ்ரீஜித் என்பவர், எருதுகடவு ஆற்றில் உள்ள பாலத்தை கடந்து சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்து, இழுத்துச் செல்லப்பட்டது. கார் 200 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஸ்ரீஜித் கார் கதவை திறந்து, அதிர்ஷ்டவசமாக நீந்தி உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், உள்ளூர் வாசிகளும் அவரை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்