கேரள அரசின் கோரிக்கைக்கு `NO' சொன்ன மத்திய அரசு

பள்ளி பாட புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்ற வார்த்தை இடம்பெறுவதாக இருந்த விவகாரம் தொடர்பாக, கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பள்ளி பாட புத்தகங்களில், இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பரிந்துரையை மறுபரிசீலனை செய்யவும், பிரதமர் மோடி மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு கேரள அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு இல்லையெனக் கூறி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com