Keralam | Attack | 100 ரூபாய்க்காக கொடூர தாக்குதல் | அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Keralam | Attack | 100 ரூபாய்க்காக கொடூர தாக்குதல் | அதிர்ச்சி சிசிடிவி காட்சி

பங்க் ஊழியரைத் தாக்கிவிட்டு தப்பியோடிவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு கேரள மாநிலம் எர்ணாகுளம் சுல்லிக்கலில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோலுக்கு பணம் கேட்ட ஊழியரை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கொடூரமாகத் தாக்கியதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 100 ரூபாய்க்குப் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பணம் தராமல் செல்ல முயன்றவர்களை ஊழியர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த இருவரும் அவரைத் தாக்கியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் ஏற்கனவே பலமுறை அங்குப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மட்டஞ்சேரி போலீசார், தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com