Kerala Amoebic Virus | 9 மாதங்களில் 17 பேர் பலி - தொடரும் உயிரிழப்புகள்.. கதிகலங்கும் கேரளா
கேரளாவில் அமீபா மூளைக் காய்ச்சலால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. நீர் மூலம் தொற்றிக் கொள்ளும் நோயான அமீபிக் மூளைக் காய்ச்சலால் கடந்த 9 மாதங்களில் 17 பேர் மரணமடைந்ததாக கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சம்பந்தப்பட்ட நீர்நிலைகள் சுத்தம் செய்யப்பட்டு வருவதாகவும் கடந்த 9 மாதங்களில் 66 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 17 உயிரிழப்புகள் ஏற்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழப்புகள் தொடர்பாக சுகாதாரத்துறையின் கணக்கில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், தற்போது அக்கணக்கு சரி செய்யப்பட்டுள்ளது.
Next Story
