Kerala Actor Sreenivasan | RIP | ரஜினியின் நெருங்கிய நண்பரான பிரபல நடிகர் திடீர் மரணம்
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். கடந்த 48 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர். இயக்குனராகவும், நடிகராகவும் அறியப்பட்ட ஸ்ரீனிவாசன், திரைக்கதை ஆசிரியராகவும் செயலாற்றி வந்தவர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதித்த இவர், சென்னை பிலிம் சேம்பர் நிறுவனத்தில், நடிகர் ரஜினிகாந்தின் வகுப்புத் தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன், தனது 69வது வயதில் காலமானார்.
Next Story
