

கேரளாவில் மே மாதம் 31ஆம் தேதிக்குள் அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள அரசே அக்கருவிகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. கேரள அரசின்
கீழ் கொல்லம் நகரத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான யுனைட்டட் எலக்ட்ரிக்கல்ஸ், பீனிக்ஸ் 140 என்ற பெயர் கொண்ட ஜி.பி.எஸ். கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுக விழாவில் தொழில் துறை அமைச்சர் ஜெயராஜன் போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரனிடம் முதல் கருவியை வழங்கினார்.