காஷ்மீரில் இயற்கையின் அடுத்த கோர முகம் - ஊரையே உருகுலைத்த பயங்கர காட்சி
அடுத்தடுத்து இயற்கை காட்டும் கோர முகம்.. 4 பேரை விழுங்கிய பூமி - பயங்கர காட்சி
ராம்பன் - தோடா மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி இரவில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. தோடா-ராம்பன் இடையிலான சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கானோர் சிக்கித்தவித்தனர். ஜம்மு-காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவத்தினர், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில், இதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டதாக ராம்பன் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜம்மு நகரில் பலத்த மழை பெய்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில், ஜம்முவில் கனமழையால் தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்காலிக போக்குவரத்துக்காக பெய்லி பாலத்தை இந்திய ராணுவம் அமைத்துள்ளது.
