

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கோரிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினர். தீவிரவாதிகளும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் , தீவிரவாதிகளுக்கு உதவியவர் என மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.