Karti Chidambaram | CBI | விசா வழக்கு.. கார்த்தி சிதம்பரம் வழக்கில் திடீர் திருப்பம்

x

சீன விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஸ்கர ராமன் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்தது.

பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, இருவர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததுடன் விசாரணையை ஜனவரி 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. இதனிடையே, குற்றச்சாட்டு பதிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வேன் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்