கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு : தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

கர்நாடக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு : தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?
Published on

கர்நாடக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளிலும் சேர்த்து சுமார் 2ஆயிரத்து 500 கன அடி மட்டுமே நீர்வரத்து இருந்தது. தற்போது காவிரிப் படுகை பகுதிகளான சிக்மகளூரு, ஹாசன், குடகு மற்றும் கர்நாடக கேரள எல்லை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்த நான்கு அணைகளுக்கும் நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com