

கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 10-ந்தேதி திப்பு சுல்தான் பிறந்த நாளாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திப்பு ஜெயந்தி விழா ரத்து செய்யப்படுவதாக, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விராஜ்பெட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் . கே.ஜி போபையா விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.