தொடர்ந்து பெய்யும் கனமழை - வெள்ள நீரில் முழுமையாக மூழ்கிய 30 கிராமங்கள்

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக பெல்காம் மாவட்டத்தில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
தொடர்ந்து பெய்யும் கனமழை - வெள்ள நீரில் முழுமையாக மூழ்கிய 30 கிராமங்கள்
Published on
கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், கர்நாடகாவின் ஆலமட்டி அணைக்கு வரும் நீர்வரத்து 4 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும், அணையில் இருந்து சுமார் மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணா நதியை ஒட்டி இருக்கும் பெல்காம் மாவட்டத்தின் காகேவாடா தாலுகாவில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால், இங்குள்ள மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கர்நாடகாவில் தற்போதுவரை கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாவும், சுமார் இரண்டாயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com