கர்நாடகா முதலமைச்சர், ஒடிசா முதலமைச்சர் ஹெலிகாப்டரில் சோதனை

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பயணம் செய்த ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்
கர்நாடகா முதலமைச்சர், ஒடிசா முதலமைச்சர் ஹெலிகாப்டரில் சோதனை
Published on

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பயணம் செய்த ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சிவமொகாவில், பிரசாரத்திற்காக குமாரசாமி, ஹெலிகாப்டரில் பயணம் செய்ய காத்திருந்த போது, அங்கு வந்த பறக்கும் படையினர், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். சோதனையின் போது பணம் கிடைத்ததா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதே போல், ஒடிசா முதலமைச்சரும், பிஜூஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் பயணம் செய்த ஹெலிகாப்டரிலும், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com