Karnataka | இளைஞர்களை "கேடிகள்" என திட்டிய அமைச்சர்.. பொதுமக்கள் ஆவேசம்!

x

கர்நாடகாவில் கோரிக்கை வைத்த பொதுமக்களை, அமைச்சர் "கேடிகள்" எனக்கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. சித்ரதுர்காவில் உள்ள சாதிக் நகரில் மசூதி கட்டுவதைக் தடுக்க வேண்டும் என அமைச்சர் டி.சுகாதரை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது பாக்யா திட்ட நிதி வந்ததா? என அமைச்சர் கேட்ட நிலையில், பேச்சை மாற்றாதீர்கள் எனக்கூறி இளைஞர்கள் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்களை அமைச்சர், கேடி எனக் கூறியதால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள், அந்த வார்த்தையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். பதற்றம் நிலவியதால் போலீசார் தலையிட்டு பொதுமக்களை அப்புறப்படுத்தினர். பின்னர் சிலர் அமைச்சரின் காரை மறித்து கோஷம் எழுப்பவே, போலீசார் அவர்களை கைது செய்தனர்..


Next Story

மேலும் செய்திகள்