கணக்கில் வராத ஐந்தரை கோடி `பிளாக் மணி'.. கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி.. களமிறங்கிய ED, IT அதிகாரிகள்

கணக்கில் வராத ஐந்தரை கோடி `பிளாக் மணி'.. கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி.. களமிறங்கிய ED, IT அதிகாரிகள்
Published on

கர்நாடகாவில், நகை வியாபாரி ஒருவரின் வீட்டிலிருந்து ஐந்தரை கோடி ரூபாய் பணம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் கம்பளி பஜாரை சேர்ந்த நகை வியாபாரி நரேஷ் சோனி என்பவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், கணக்கில் வராத.. ஐந்தரை கோடி ரூபாய் பணம் மற்றும் 3 கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகைகளையும் பறிமுதல் செய்த போலீசார், உடனடியாக, அமலாக்கத்துறைக்கும், வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தேர்தல் நேரமென்பதால் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும் நோக்கில் பணமும், நகைகளும் பதுக்கி வைக்கப்பட்டதா என இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com