சோலைக்கொள்ளை பொம்மையான நடிகைகள்.. அட இவங்களா?

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுராவில் கண் திருஷ்டி படக்கூடாது என விவசாயி ஒருவர் கவர்ச்சி நடிகைகளின் புகைப்படங்களை விளைநிலத்தில் நிறுத்தியுள்ளார்.

ஹண்டிகனாலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தீபக், தனது நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

தக்காளி செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளதாக கிராம மக்கள் தீபக்கிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, தக்காளி செடிகள் மீது கண்திருஷ்டி பட்டுவிடக் கூடாது என நினைத்த தீபக், பறவைகளை விரட்டுவதற்காக வைக்கப்படும் சோலைக்கொள்ளை பொம்மைகளை எடுத்துவிட்டு,,,

அதற்குப் பதிலாக கவர்ச்சி நடிகைகளான சன்னி லியோன், ரட்சிதா ராம் ஆகியோரது புகைப்படங்களை வைத்துள்ளார்.

இதனால் கண் திருஷ்டி கழிந்து செடிகள் சிறப்பாக வளர்வதாக நம்பி வரும் விவசாயி, தக்காளி விளைச்சல் அமோகமாக இருப்பதாகவும் நல்ல லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தக்காளி தோட்டத்தில் கவர்ச்சி நடிகைகளின் புகைப்படங்கள் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com